முதல் முறை கனவு பலிக்குதே...

பார்த்திருந்த டிவிடியை
பாதியிலே கைவிட்டு
இரவு பனிரெண்டிற்கே
உறக்கம் தழுவ எத்தனித்தேன்
காலை எட்டரைக்கு
கான்ஃப் கால்
பனிரெண்டு மணி நேரம்
செய்த வேலை அசதியில்
உணரும் முன்
உறங்கி தான் போனேன்
கனவுகள் ஏதும் இன்று இல்லை
தினமும் கனவுகள் வர
வரம் ஏதும் என்னிடம் இல்லை
ஆனால்
ரம்மிய இசை மட்டும்
புதிய இணைப்பாக
என் காதருகே ஒலித்துத்திருந்தது
ஆஹா எத்தனை சுகம்!
கேட்கும் இசையின் வடிவமும்
பல முறை கேட்டது போல!
ஹே இல்லை இல்லை
இசை என் கனவில் அல்ல
என் காதருகே இருந்த
என் கைபேசியில் தான்
முன்பே வா வின்
முதல் வரி
முத்தாய்பாய்
அட
நீ தான்
இந்நேரத்தில்
என்ன ஆச்சர்யம்!
தூக்கத்தின் பிடியை
நொடியில் விடுத்தேன்
திடீர் அமைதி
நான் பதிலளிக்கும் முன்
கொண்டது மெளனம்
இன்னும் சரியாக தெளியவில்லை
ஓ
ஒரு எஸ் எம் எஸ் வேறு
உன்னிடமிருந்து
ஏழு நிமிடங்கள் முன்
பதில் அளிக்காததால்
தூது அனுப்பினாயா
முன்பே வா என்று?
வாசித்தேன்
" "
வார்த்தைகள் போதுவதில்லை
சில சந்தோஷங்களை பகிர்ந்துக் கொள்ள
அல்ல அல்ல
வார்த்தைகளில் சொல்ல தெரிவதில்லை
பல நாள் கனவு ஒன்று
கனவில்லா இரவு உறக்கத்தின் போது
நனவானது
உற்சாகம் உச்சஸ்தாயில் ஆர்ப்பரிக்க
உள்ள சுவடே தெரியாமல் விடை பெற்றது உறக்கம்
போர்வையை விலக்கி
படுக்கையிலே எழுந்தமர்ந்தேன்
என்ன பதிலளிப்பது?
சுகமான இந்த கேள்விக்கு
பதில் தேட துவங்கினேன் :)
கனவில்லா உறக்கம் என்று
நினைத்திருந்தேன்
எத்தனை மாற்றம் அதனுள்
கனவும் நனவு ஆனது
உறக்கம் இல்லாமலே போனது
உண்மையாக நிலைத்திருந்தது
உன்னை நினைத்திருந்தது மட்டுமே!


<< Home