Wednesday, September 12, 2007

பிடித்திருக்கிறது!














பல நாள்
உன்னை நினைத்து
நான் எழுதிய‌
கவிதைகள்

இன்று கடைசியாக‌
உன் திருமணத்திற்காக‌
நான் எடுத்த‌
உன் ஜாதக ப்ரிண்ட் அவுட்

இரண்டிலுமே
ஏதோ ஒரு ஒற்றுமை

ஆம்!

அன்று
அமைதியான என் மனதில்
ஒரு ஆர்ப்பாட்டம்

இன்று
ஆர்ப்பாட்டமான என் மனதில்
ஒரு அமைதி

ஏனோ
இரண்டுமே பிடித்திருக்கிறது!