Wednesday, October 03, 2007












2007 போதும்
2008 வேண்டாம்

நவம்பரை அடுத்து
டிசம்பர் வேண்டாம்

மீண்டும் மீண்டும்
நவம்பர் மாதமே
வந்தால் என்ன?

இன்று முடிந்து
நாளை வர வேண்டாம்
இன்று ஒரு நாளே
இறுதி வரை
இருந்துவிட்டால் என்ன?

அடுத்த
வருடமோ
மாதமோ
வாரமோ

என் வாழ்வில்
நீ இல்லாமல் தான்
போவாய் என்றால்

இவை எல்லாம்
இல்லாமலே போனால் தான் என்ன?