கார்குழலி!

உன்
கூந்தலில் மணம்
இயற்கையா?
செயற்கை?
விடை தெரியவில்லை எனக்கு
இது நாள் வரை
இனியும்
தெரிந்து கொள்ள போவதில்லை தான்
ஆம்!
ஒவ்வொரு முறையும்
தலை குளித்து
கூந்தல் விரித்தபடி
நீ வருகையில்
என் சுவாசம்
உணரும்
உன் வாசம் போதும்
ஒரே நொடியில்
சொக்கி விடுகிறேன்
இப்படி இருக்க
எப்படி சாத்தியம்
ஆராய்ச்சிகள்?
சரி
மணம்
இயற்கையோ
செயற்கையோ
தெரிந்து கொள்வதில்
ஆசையும் இல்லை
ஆர்வமும் இல்லை
கொண்ட ஆசை என்னவோ
உன்
கார் கூந்தலில்
என்
முகத்தை
புதைத்துக்கொள்ளவே!


<< Home