பறவையாக இருந்திருந்தால் !

"நாம்
பறவையாக இருந்திருந்தால்
எப்படி இருந்திருக்கும்?
எத்தனை முறை
சந்தோஷமாக
இவ்வுலகை
சுற்றி பறந்திருக்கலாம்?"
என்றாய்.
சரி தான்!
உலகின் ஒவ்வொரு மூலையையும்
உன்னுடன் சென்று பார்த்து ரசித்திருந்தால்
எத்தனை அருமையாக இருந்திருக்கும்?
அது ஏன்
பறவையாக மட்டும்?
இப்போதே நான்
என் உலகை
அனுதினமும்
சுற்றிக் கொண்டு தானே இருக்கிறேன்!


<< Home