Wednesday, September 19, 2007

சுவாரஸ்யம்!

வாழ்க்கையின்
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
ஒவ்வொரு சுவாரஸ்யம்

பால் பருவத்தில்
தொட்டில்
தாய் மடி

பள்ளிப் பருவத்தில்
வீடு
விடுமுறை

கல்லூரி பருவத்தில்
கனவுகள்
கற்பனைகள்

வேலையில் சேர்ந்த பின்
டீ ப்ரேக்
பி டி ஓ

தற்போது
நீ
உன் தோழமை

அடுத்த‌து என்ன?

உன் நினைவுகளா?
நீயா?