Monday, July 09, 2007

வேண்டுதல்!














கடவுளிடம்
எனக்காக‌
பிராத்தனை
செய்து கொள்!

என்ன?
உய‌ர்த்திய‌ புருவ‌ங்க‌ளுட‌ன்
நான்.

ஏன்?

என்ன ஆயிற்று?

பதில்கள் சொல்லாமலே
சென்று விட்டாய்.

குழம்பித்தான் போனேன்

கடவுளின்
செல்ல படைப்பு
நீ

உனக்கேன்
தனி பிராத்தனை

குழப்பம் தீரவில்லை

சரி
இறைவனிடம்
இதோ என் சின்ன வேண்டுதல்

சன்மானம்
எதுவாக இருந்தாலும் சரி
அதை அவளுக்கு தந்துவிடுங்களேன்.

சவால்
எதுவாக இருந்தாலும் சரி
அதை எனக்கு தந்துவிடுங்களேன்!