மெட்ராஸ சுத்தி பாக்க போறோம்!

அன்று
அதிகாலை
கடற்கரையில்
கைகோர்த்தபடி நடந்திருந்தோம்
அலைகள் மெல்ல நம் கால்கள் தழுவ
உலகின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தோம்
மனம் அப்பொழுது போல்
எப்பொழுதுமே இருந்ததில்லை
அமைதியாகவும்
அடாவடியாகவும்
இன்று போல் என்றுமே
இருந்திடுமோ?
ம்ம்...
இனி
ஒரு நாளாவது
இத்தனை சந்தோஷமாக
இருந்திடுமா?
இருந்தது இன்று
பேய் மழை அல்ல
மெல்லிய சாரலும் அல்ல
மழையில் நனைந்து ரசிக்க
ஏதுவான ஒரு அளவு
உன் ஸ்கூட்டியில் நாம்
என் தோள்களின் பின்
ஒளிந்தபடி நீ
மழையில் நனைந்த
நாய்க்குட்டி போல :)
மழை தேவதையின்
முழு தரிசனம்
கிடைத்தபடி
என் தேவதையுடன்
நான்
இம்முறை
நகரின் அளவை அளந்தோம்
சென்னை இப்படி என்றுமே இருந்ததில்லை
என் மனமும் இப்படி என்றுமே இருந்ததில்லை
அமைதியாகவும்
அடாவடியாகவும்
இனி அடுத்த நன்நாள் எப்பொழுது?


<< Home