Thursday, July 05, 2007

நியூ பின்ச்!

எனக்கேன்
புது சட்டை இப்போது?

இருக்கறதே போதும்
வேண்டாம்
என மறுத்தும்
வாங்கி தந்தார்
என் தந்தை

உடுத்தி சென்றேன்

அடுத்த நாள்

ஹே...என்ன புது சட்டையா?
கேட்டபடி கொடுத்தாள்
நியூ பின்ச் என் கையில்!

புது உடை உடுத்துகையில்
கொடுப்ப‌தாம்
நியூ டின்ச் என் இதயத்தில்!

அன்று மாலையே
விரைந்தேன்
பேசிக்ஸ் வாசலுக்கு
அடுத்த இரண்டு வாரம்
நியூ பின்ச் வாங்குவதற்காக‌!