என்ன ஒற்றுமை?

வறண்ட நிலம்
விண்ணின் மழை வித்தைகள்
காண ஏக்கத்துடன்
விவசாயி
நிழற்குடை
பெருகும் மக்கள் கூட்டம்
தாமதமாக வரும் பேருந்தை நம்பியபடி
பயணி
ஏடிஎம்
முதல் மாத சம்பளம்
கையில் பணம் பார்க்க ஆர்வத்துடன்
சாஃப்ட்வேர் என்ஜினியர்
மாலை ஆறு மணி
எட்டிப் பார்க்கும் நிலா
விண்ணை கொள்ளைக் கொள்ள துடிக்கும்
இரவின் இருட்டு
வீட்டு வாசல்
சுப்ரபாதத்தின் சுபஒலி
தினதந்தியை ஆவலுடன் எதிர்பார்த்தபடி
திண்ணையில் தலைவன்
ஏர்போர்ட்
பல வருடங்கள் பின்
பிரிந்தோரைப் பார்க்கும் ஆசையில்
யு எஸ் ரிடர்ன்
சினிமா தியேட்டர்
தன் தலைவனின் அறிமுகம்
ஆரவரிக்க துடிக்கும்
சராசரி ரசிகன்
கடைசி வகுப்பு
மணி அடித்ததும்
வீடு சென்று தாய் முகம் பார்க்க துடிக்கும்
பிஞ்சு நெஞ்சம்
இவர்களுக்கும்
எனக்கும்
என்ன ஒற்றுமை?


<< Home