
வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்
பொய் கோபம் கொண்டாய்
நீ
இப்படியெல்லாம் செய்தால்
இனி
உன்னிடம் பேச போவதில்லை என்றாய்
கண்டு கொள்ளாமல் சிரித்தேன்
"கவரி மான் ஜாதி நான்"
என்றாய்
அப்படியா!
வெகு நாள் சந்தேகம் தீர்ந்தது
என்றேன்
ஆம்
நீ துள்ளி விளையாடி
செய்யும் குறும்புகள்
பார்க்கும் போதெல்லாம்
தோன்றியது
இன்று உறுதி ஆயிற்றே!
<< Home