திசைகள்!

உன் தோழியின்
புது சைக்கிள்
புதிதாக கற்றுக்கொள்வது போல்
உற்சாகத்துடன் அதில்
நீ
சற்று தொலைவில்
இதனை ரசித்தபடி
நான்
கைப்பிடி கொண்டு
முன் சக்கரத்தை
லாவகமாக நீ இயக்க
பின் சக்கரம்
சொல் பேச்சு மீறாமல்
தொடர்ந்தது
ம்ம்ம்...
பழகிய காட்சி தான் எனக்கு
வேறு கோணத்தில்
ஆம்!
முன் சக்கரம்
நீ
பின் சக்கரம்
என் மனம்
நீ
எத்திசையில் செலுத்தினாலும்
அத்திசையே
என் மனதின்
ஒரே திசை!


<< Home