Monday, July 09, 2007

கண்களில் என்ன ஈரமோ!
















கடலின்
அமைதி‍யா?
தனிமையா?

காற்றின்
தூய்மையா?
வெறுமையா?

நெருப்பின்
வெற்றியா?
வேதனையா?

ஆற்றின்
மெளனமா?
சோகமா?

மேகத்தின்
குடையா?
மழையா?

உன் கண்களில்
கனவா?
கலக்கமா?