Thursday, August 09, 2007

வாழ்க்கை!

விபத்தன்று
நள்ளிரவில் துணையிருந்து
உதவிகள் பல செய்து
மேலும் பல படிகள்
என் மனக் கணக்கில் உயரிய‌
சிசி

செல்போன் தொலைந்ததால்
மிக அருகே இருந்தும்
விஷயம் தெரியாது உதவமுடியாததால்
மிகவும் மனம் வருந்திய‌
சத்தீஷ்

காலையில் எனக்காக‌
டிப்பனையும், மாத்திரைகளையும்
நான் கேட்காமலே
வாங்கி வைத்திருந்த‌
கணேஷ்

அலுவலகத்தில்
விபத்தைப் பற்றி அறிந்து
என்னை உடனே வீட்டில் சந்தித்து
பின் அலுவலகம் அழைத்து வந்த‌
சூர்யா

என்னை அக்கறையாக‌
ஓய்வெடுக்க சொல்லி
ஊர் சென்ற பிறகும்
பல முறை என்னை
கனிவாக விசாரித்துக் கொண்டிருந்த‌
மஹா

விபத்தின் போது
தண்ணீர் கொடுத்து
என் பைக்கை பார்க் செய்து
ஆட்டோ பிடித்துக் கொடுத்த‌
அந்த பெயர் தெரியாத‌
திடீர் தோழர்கள்

வாழ்க்கையின் மீதிருந்த‌
நம்பிக்கையினை
பல மடங்கு
அதிகமாக்கிய அனைவருக்கும்
ந‌ ன் றி!