Friday, July 20, 2007

மெளனம்!














ஹலோ..
ஹலோ..
ஹே என்ன ஆச்சு?
இருக்கியா?
ஹலோ நான் பேசுறது கேக்குதா?

என்ன ஆச்சு இவளுக்கு?
ஏன் பேசாமல் இருக்கிறாள்?

எப்படியும் மீட்டிங் ரூமை விட்டு வெளியே வந்தாயிற்று. இருந்து பேசி விட்டு போகலாம் என்று அவளிற்கு டயல் செய்தேன்.

ரிங் ஆக ஆரம்பித்தது.

முதல் ரிங்கிலே எடுத்து விட்டாள்.

மீண்டும் மெளனம்!

ஹலோ
இருக்கியா?

இதென்ன விளையாட்டு
கொஞ்சம் சலிப்பு தட்டியது.

காலை கட் செய்துவிட்டு மீண்டும் அந்த அதி முக்கிய மீட்டிங்கில் ஐக்கியமானேன்.

இன்னும் குழப்பம் தீரவில்லை.

ஒரு வேளை அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?
அது தெரியாமல் நாம் பாட்டுக்கு வந்துவிட்டோமா?

எப்போது இந்த மீட்டிங் முடியும் என்றிருந்தது.

பீப்..பீப்

எஸ் எம் எஸ் என் செல்லில்
அவள் தான்.

"hey tday me mouna viratham. u forgot? still called to wish u gud morn. kaeticha? he ha :)"

சட்டென முகத்தில் பரவிய அந்த சிரிப்பினை அடக்க மிகவும் சிரமபட்டுத் தான் போனேன்!