சதுரங்கம்!

அறுபத்தி நான்கு
கட்டங்கள்
நிலவின் வண்ணம்
உன்னிடம்
கார்மேகத்தின் வண்ணம்
என்னிடம்
முதல் அடி
வைத்தாய் நீ
நேர் எதிர் இல்லாமல்
மறுபுறம் துவங்கினேன்
நானும்
நேராகவும்
அஷ்ட கோணலாகவும்
அடி மேல் அடியாகவும்
என்னை தாக்கினாய்
பல திசைகளிலும்
சமாளிக்க சமாளிக்க
உற்சாகமானேன்
உன் விளையாட்டில்
சிறிதாக சாய்ந்தேன் பலமுறை
கடின முயற்சி பின்
அறிதாக சாய்த்தேன் உன்னையும் சில முறை
சாய்த்த பின்னும் சரி
சாய்ந்த பின்னும் சரி
இறக்கை கொண்டது என் மனம்
விளையாட்டு
என்னவென்று பார்க்கும் முன்
ஆனது
வினோத வேடிக்கை
செக்! என்றாய்
நீ
என்னிடம்
ஆம்
ராஜா
மாட்டிக்கொண்டான்
ராணியிடம்
முதல் முறையாக
ஓ இது தானா?
வேறு வழி ஏதும் இல்லாமல்
செய்வதறியாது நான் திகைத்திருக்க
மெல்ல மெல்ல
சாய்த்தேவிட்டாய் என்னை
முழுவதுமாக!


<< Home