
இப்போதெல்லாம்
நீ ஏன்
அதிகம்
எழுதுவதில்லை?
காரணம்?
பணியில் தீவிரமா?
பாணியில் மாற்றமா?
தொடரும் தவிப்புகளா?
தோழமையில் தடுமாற்றமா?
ம்ம்...
எப்பொழுதும் போல்
இப்போதும்
கேள்விகள் எல்லாம்
நன்றாக தான் கேட்கிறாய்
ஆனால்
பதில்கள்
இல்லாதவைக்கு
அல்ல
எனக்கு
தெரியாதவைக்கு
ம்ம்...
சீக்கிரமே புரிந்து விடட்டும்
இது
வான வேடிக்கை அல்ல
வானவில் என்றே!


<< Home