ரசிகன்!

எதுவென்று தெரியவில்லை
நான் அவளிடம் முதன் முதலாக ரசித்தது.
தினமும் காலையில்
என்னையும் ஒட்டிக்கொள்ளும்
உற்சாகத்துடன் அவள் சொல்லும்
"குட் மார்னிங்"
எதற்கென்றே புரிந்து கொள்ள முடியாது
திடீரென அவள் வெடித்து சிரிக்கும்
அந்த சிரிப்பு
வாழ்க்கையின் சில கடின பாடங்களை
சுலபமாக கற்றுக் கொள்ளும்
அந்த பக்குவம்
தோழிகளுடன் அவள் அடிக்கும்
எல்லை இல்லா லூட்டிகள்
அதனை என்னிடம் சொல்லும் அழகு
பிற பெண்களை பற்றி என்னிடம் கேட்டு
பின் என்னை அவர்களுடனே
வம்பிழுக்கும் அந்த குறும்பு
நான் எழுதியவற்றை படித்து
அவற்றை புரிந்தும் புரியாதவளாய்
என்னை விளக்க சொல்லி
அவள் எனக்கு கொடுக்கும்
செல்ல சங்கடம்
இவற்றில்..
எதுவென்று தெரியவில்லை
நான் அவளிடம் முதன் முதலாக ரசித்தது.
ஒன்று மட்டும் புரிந்தது.
என்றும் நான்
அவளின் ரசிகன் தான்
ஆனால்
இவையில் மட்டுமே என்று அல்ல
இன்னும் அறிந்து கொள்ள போகும்
ரசிக்க போகும் பலவற்றிலும் தான்!


<< Home