சுகம்!

காதலா?
"ச்சே...நிச்சயம் இல்லை. இதெல்லாம் ஒரு ஈர்ப்பு. அவ்வளவே!"
ம்ம்..காதலா ஏன் இருக்க கூடாது?
"ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்திருந்தால் மட்டும் போதுமா.
அது காதலாகிவிடுமா?
அந்த உறவிற்கு வேறு பரிமாணங்கள் இருக்கலாம் இல்லையா?"
இருக்கலாம்...
ஆனால் வேறு பரிமாணங்கள் இல்லாமலும் இருக்கலாம் அல்லவா?
"ம்ம்ம்...இருக்கலாம்
இதற்கு பதில் சொல்.
உனக்கு பிடித்த பெண்கள் வேறு யாரும் இல்லையா
அது போல் அவள் விரும்பி பழகும் ஆண்களும் வேறு இல்லையா?
அப்படி இருக்க ஏன் இவளிடம் மட்டும் இந்த குழப்பம்?"
அது தான் நானும் கேட்கிறான்.
ஏன் இவளிடம் மட்டும் இந்த குழப்பம்?
"______"
பல மணி நேரம் யோசித்தும்
விடை தெரியாமலே
விடைகொடுத்தேன் என் தனிமைக்கு.
கிளம்பினேன் அவளை சந்திப்பதற்காக.
காத்திருந்தேன்.
சரியாக ஐந்து நிமிடங்களில்
விண்வெளியில் இருந்து
கீழிறங்கினாள் என் தேவதை.
என்றும் இல்லாது
இன்று அதிகமாகவே அழகாக தெரிந்தாள்
'ஹாய்'
சிந்திய புன்னகையில் சொக்கி தான் போனேன்.
மதில் மேல் பூனை
ஒரு பக்கம் தாவ முனைந்திருந்தது.
பேசினோம்.
பேசவில்லை நான்.
இருதயம் எவ்வளவு நேரம் தான்
இரட்டை வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கும்.
மெல்ல..
மீண்டும் அமைதி
என் மனதில்.
கண் இமைக்கும் முன் கரைந்தது
கடிகாரத்தில் நூறு நிமிடங்கள்.
பூனை அமைதியுடன்
மதிலில் நின்றிருந்தது.
பிரிந்தோம்.
தெளிவு இன்னும் பிறக்க வில்லை.
ஆனாலும் ஒரு சுகம்
மீண்டும் மீண்டும் அது பற்றி
நினைவு கூர்ந்து
இப்படி எழுதிக்கொண்டிருப்பதில்!


<< Home