Tuesday, May 08, 2007

சோகம்!













உலகின் மிக சோகமான காதல் கதை எங்களுடைய‌து தான் தெரியுமா?

எங்களை ஏமாற்றுவதாக நினைத்து
தங்களையே ஏமாற்றிக் கொள்ளும்
காதலர்களைப் பார்ப்பது தான்
எவ்வளவு சோகம்!

அன்பாக விதைத்தார்கள்
ஆசையாக வள‌ர்த்தார்கள்
காதலில் நான் கொடுத்தவை எல்லாம் அனுபவித்தார்க‌ள்.

என்னிடம் தருவதற்கு வேறேதும் இல்லை என்றெண்ணி
என்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து
தங்களையே அழித்துக் கொள்ள வழி வகுக்குகிறார்களே!

ஆம் காதலர்கள்..
இந்த மனித இனத்தை தான் சொல்கிறேன்.

காதலிகள்..
கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் அடையாளங்களை அகற்றி
எங்கள் சகோதரிகளை காணாமல் போய்
இன்று இவர்களின் பிடியில் சிக்கி தவிக்கும்

ஆம்...நாங்கள் இந்த இயற்கை வளம் தான்!