ஹாசினி!

இருபத்து மூன்று வருடங்கள்
உன் வாழ்வில்
நான் கண்டிராத நாட்கள்
உன் முதல் அழுகை
முதல் சிரிப்பு
மழலைப் பேச்சு
எதுவுமே கண்டதில்லை நான்!
பள்ளி சீறுடையில் நீ
தோழிகளுடன் ஓயாமல் கதைத்தபடி நீ
சைக்கிளில் பள்ளி செல்லும் நீ
எதுவும் தெரிந்ததில்லை எனக்கு!
இரவு கண் விழித்து
தேர்வுகளுக்கு படித்த பொறுப்பு
முச்சந்தி பிள்ளையாரிடம்
நீ பேசிய ரகசியங்கள்
உறவுகளின் சிக்கல்களினால்
சிந்திய கண்ணீர் துளிகள்
எதுவும் புரிந்ததில்லை எனக்கு
ஆனால் கவலை அதிகம் இல்லை
நமக்கு பிறக்க போகும் மகள்
ஹாசினியிடம் கண்டுக் கொள்வேன்.
நான் கண்டிராத
உன் இருபத்து மூன்று வருடங்களை!


<< Home