Tuesday, May 01, 2007

நிழல்!

உன்னை விட என் மேல்
அதிக ப்ரியம் கொண்டவள்
உன் நிழல் உருவம் தானோ!

இவ்வழகிய மாலை பொழுதில்
இரண்டடி தள்ளி நீ நிற்க..

அவளோ

சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தினை
சிறிதும் கண்டுகொள்ளாது

என் மேல் படர்ந்திருக்கும்
அழகினைப் பார்த்தாயா!