புது வருட நினைவுகள்!

ஊற்றெடுக்கும் உற்சாகம்.
நண்பர்களின் நடு நசி தொலைபேசி அழைப்புகள்.
தொலைகாட்சியின் டாப் டென் நிகழ்ச்சிகள்.
பக்தர்கள் அலை மோதும் கோயில்கள்.
பெற்றோரின் ஆசைகள் அறிவுரைகள்.
சென்ற வருடமும் கொண்ட அதே ரெசொலுஷன்ஸ்.
எதுவும் மாற வேண்டாம்.
இந்நாள் போல் எந்நாளும் அமையட்டுமே!
கனவுகள் கண் முன் கவிதையாகட்டுமே!
புத்துணர்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கலாம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ps: An alternate version by my friend Karthikayan.
அருவியாய் கொட்டும் ஆனந்தம் மனதினில்
ஆஃப் ஆகாத செல் போன் காதினில்
'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' விளம்பரங்கள்
ஈக்கலாய் கோவிலை மொய்க்கும் பக்தர்கள் கோரிடும் வரங்கள்
உள்ளம் கனிந்த உற்றவர்களின் அறிவுரைகள் ஆசியுடன்
ஊக்கமுடன் உறுதிமொழிகள் 'இம்முறையேனும்' அடிக்கோடு டன்..
எதுவும் மாற வேண்டாம்..
ஏக்கங்கள் தீர ட் டும் எந்நாளிலும் இன்று போல்...
ஐம்புலங்களும் உணரட்டும் இன்று.. ஆசைகள் என்னவென்று..
ஒன்றாய் அழைப்போம் புத்தாண்டே வாருங்கள்..
ஓர் ஆண்டு காத்திருக்க நேரிடும் இன்று விட்டால்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Ps 2: Did you notice the starting letters of every line in this alternate version? :)


<< Home