Wednesday, October 25, 2006

கையி‌ணைத்து செல்ப‌வரோ எவ‌ர்!

எண்ண‌ற்ற‌ வ‌ண்ண‌ங்க‌ள் என் இத‌ய‌த்தில்
எண்ண‌ற்ற‌ வ‌டிவ‌ங்க‌ள் இன்னும் உத‌ய‌த்தில்

அர்த்த‌ம் கொள்ள‌ ஆயிர‌ம் வாச‌க‌ங்க‌ள்
அர்த்த‌ம் சொல்ல‌ யார‌ங்கே வாச‌க‌ர்க‌ள்

வான‌வில்லை பிடிக்கும் துணை வேண்டாம்
வாழ‌ இல்லை என‌க்கு துணை வேண்டும்

வெள்ளை காகித‌ம் போல் வெறும‌னே இருந்த‌ என் ம‌ன‌ம்
கொள்ளை ஆனந்த‌ம் கொள்வது எக்க‌ண‌ம்

கையெழுத்திட்டு சென்ற‌ன‌ர் ப‌ல‌ர் - என்னுட‌ன்
கையி‌ணைத்து செல்ப‌வரோ எவ‌ர்!