காலையில் தினமும்...
"ஹாய்! குட்மார்னிங்!"
திடீரென முளைத்த அந்த விண்டோ
என்னை பார்த்து சிரிக்க
காலை பத்து மணிக்கு விடிந்தது எனக்கு.
பல நாட்களில் இந்நேரமே எனக்கு விடியல்.
சில நாட்களோ விடியாதே விடுபெற்றுவிடும்,
அன்று அவள் விடுப்பில் இருந்தால்.
ஆம். அவள் தான்!
கோடையில் வரும் திடீர் மழை
பள்ளி வகுப்பில் ஆசிரியரின் திடீர் விடுப்பு
பழைய நண்பனின் திடீர் தொலைபேசி அழைப்பு
இவ்விண்டோ-வின் திடீர் சிரிப்பு.
இவற்றிற்கு எல்லாம் ஒரே முகம்
அவை தரும் திடீர் உற்சாகம்!
என்னுள் இச்சமயம்!
"நைட் வீட்டுக்கு போகும் போதும் இருக்க.
காலைல ஆஃபிஸ் வரும்போதும் இருக்க.
நீ எப்போ தான் தூங்குவ?"
ஆஹா! நன்றாக கேட்டாய்.
இதற்கு பேர் தான் குழந்தையைக் கிள்ளி விட்டு
பின்பு தொட்டிலையும் ஆட்டுவதா?
சொல்ல நினைத்த பதில்.....
நீ என்னை தூங்கவிட்டால் தானே!
சொன்னது என்னவோ.....
வேலை அதிகம் என்ற சுத்த பொய்.
அலைகள் போல் தொடர்ந்த
அறுநூறு நொடிகளை கடந்த பின்
"பை ஃபார் நௌ" என்றாள்.
எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்.
அவள் சொன்னது வெறும் பை அல்ல.
பை ஃபார் நௌ!
திடீரென முளைத்த அந்த விண்டோ
என்னை பார்த்து சிரிக்க
காலை பத்து மணிக்கு விடிந்தது எனக்கு.
பல நாட்களில் இந்நேரமே எனக்கு விடியல்.
சில நாட்களோ விடியாதே விடுபெற்றுவிடும்,
அன்று அவள் விடுப்பில் இருந்தால்.
ஆம். அவள் தான்!
கோடையில் வரும் திடீர் மழை
பள்ளி வகுப்பில் ஆசிரியரின் திடீர் விடுப்பு
பழைய நண்பனின் திடீர் தொலைபேசி அழைப்பு
இவ்விண்டோ-வின் திடீர் சிரிப்பு.
இவற்றிற்கு எல்லாம் ஒரே முகம்
அவை தரும் திடீர் உற்சாகம்!
என்னுள் இச்சமயம்!
"நைட் வீட்டுக்கு போகும் போதும் இருக்க.
காலைல ஆஃபிஸ் வரும்போதும் இருக்க.
நீ எப்போ தான் தூங்குவ?"
ஆஹா! நன்றாக கேட்டாய்.
இதற்கு பேர் தான் குழந்தையைக் கிள்ளி விட்டு
பின்பு தொட்டிலையும் ஆட்டுவதா?
சொல்ல நினைத்த பதில்.....
நீ என்னை தூங்கவிட்டால் தானே!
சொன்னது என்னவோ.....
வேலை அதிகம் என்ற சுத்த பொய்.
அலைகள் போல் தொடர்ந்த
அறுநூறு நொடிகளை கடந்த பின்
"பை ஃபார் நௌ" என்றாள்.
எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்.
அவள் சொன்னது வெறும் பை அல்ல.
பை ஃபார் நௌ!


<< Home