என் காதுகளை ஏன் இப்படி திருகி வைக்கிறாய்?
என் பைக் என்னிடம் சண்டையிட்டது.
பின் வரும் ஊர்திகள்
உன் கண்களிற்கு காட்சியளிக்க வேண்டாமா?
ம்ம்ம்...
அதனிடம் சொல்ல முடியுமா
என்றோ ஒரு நாள்
என்னுடன் உடன்வரும் என்னவளின்
முகம் பார்க்க தான்
எப்பொழுதுமே அக்கோணம் என்று!
<< Home