பெண்மை!

ஆறு ஆண்டுகளாக அவளை எனக்கு தெரியும்.சரியான சுட்டி பெண். வாயை திறந்தால் ஆறு மணி நேரம் தொடர்ந்து பேசுவாள். அண்ணா அண்ணா என்று என் மீது மிகவும் பிரியமாக இருப்பாள். அவளை அடிக்கடி சந்திக்காவிட்டால் உரிமையுடன் என்னிடம் கோபம் கொள்வாள்.திருமணத்தின் போது தன் பெற்றோர்களுக்கு அடுத்து என்னிடம் ஆசி பெற்றபோது என்னை கண் கலங்க செய்தவள்.
இன்று மறுபடியும் கண் கலங்கிய படி அவள் முன் நான். கடவுளே குடி கொண்டிருந்தது போல் ஒரு அமைதியுடன் அவள் முகம். அவள் என் சுட்டிப் பெண் இல்லை. எனக்கு விளங்காத மாற்றம் ஒன்று அவளிடம். வாழ்விற்கும் சாவிற்கும் இடையே நடந்த போராட்டத்தின் சுவடு துளியும் தெரியாமல் சாந்தமாக அவள்.

பக்கத்தில் அவள் உயிரின் ஒரு பாதி ஆழ்ந்த உறக்கத்தில். என்னை பார்த்து புன்னகைத்தாள். மெல்லிய குரலில் என்னை நலம் விசாரிக்கும்போது சுட்டிப் பெண் மீண்டும் எட்டிப் பார்த்தாள்.
அவளை பேச வேண்டாம் என்று சொல்லி ஓய்வாக இருக்க சொன்னேன். மீண்டும் புன்னகைத்தவள், தன்னை ஒட்டி உறங்கிக் கொண்டிருக்கொண்டிருந்த அந்த பிஞ்சினை வாஞ்சையுடன் பார்த்தபடி அதன் விரலை நீவி விட்டாள். மீண்டும் அவள் என் சுட்டிப் பெண் போல் இல்லை.

ஏனோ ஒரு மாற்றம். நானறியா ஒன்று .
நான் அமைதியுடன் அந்த காட்சியினை பார்த்த படி நின்றிருந்தேன்.
பெண்மை, தாய்மை. இவ்விரண்டும் ஆண்களால் என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாத புதையல்கள் போலும்!

<< Home