என் இதயத்தின் இசை!

மேகத்தினிடையே நீ உலா வர
முதன்முதலில் நான் உன்னை கண்டேன்
புல்லாங்குழலின் இசை என் இதயத்தில்!
நீ அன்று பார்த்த முதல் பார்வை
இன்றும் என் நெஞ்சை வருடும்
பியானோவில் வாசித்த மொசார்டின் மெலடிகள்!
நீ என்னை நெருங்கி வருகையில்
4/4 என இருந்த என் இதயத்தில்
இலக்கணம் மீறிய புது தாளங்கள்!
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
உன் இசைக்கு இணை கொடுத்த
அந்த ஆயிரம் வயலின்களின் பேராதரவு!
நீ என்னிடம் இருந்த ஒவ்வொரு நிமிடமும்
தேவதைகள் அனைவரும் ஒன்றாக
பின்ணனியில் ரங்கோ ரங்கோலி!
உன் நினைவில் நான்
தினம் தினம் புதிதாக
எழுதபடாத சிம்பொனிகள்!


<< Home