தேடல்!

வாழ்க்கை என்னும் நெடுந்தூர பயணத்தில்
நானும் ஒரு பயணி.
பார்வை இல்லா பயணி!
ஆம்!
வாழ்க்கையில் என்ன வேண்டும்?
எதை நோக்கி செல்வது?
யாரிடம் உதவி கேட்பது?
இப்படி பலவற்றும் தெரியாத எனக்கு,
என் மனக்கண்ணிற்கு,
பார்வை இல்லை தானே.
அதோ இவ்விடம் வீசும் நறுமணம்
இதை நோக்கி செல்வதா?
இதோ குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் என் மேல்
வெப்பத்தால் தாக்கும் காற்று
அதன் திசையில் செல்வதா?
அங்கு கேட்கிறதே ஒரு ரம்மிய இசை
அவ்விடம் நோக்கி செல்வதா?
குளிர் பிரதேசங்களில் என் வாழ்க்கையை துவங்கிய எனக்கு
வெப்பம் சொகுசு!
எளிமையாக துர்நாற்றங்களை கண்டுகொள்ளாது
வாழ்ந்து பழகிய எனக்கு
நறுமணம் அது ஆடம்பரம்!
இந்த ஆடம்பரமும் சொகுசும் வேண்டாம் என
என்னை ஈர்த்து இழுக்கும் இசை...
ஆஹா...இது அல்லவோ காதல்!
நோக்கி செல்கிறேன் இசையில் லயித்தப்படி!
நறுமணம் இன்றி தவிக்கும் நாட்கள் நிச்சயம்.
வெப்பத்தின் விடியல் இல்லாது
நான் அல்லாடும் நாட்களும் நிச்சயம்.
ஆனால் இன்று நான் எடுத்த முடிவு தவறு என
நினைக்கும் நாள் மட்டும் நிச்சயம் வரா!
இசையின் மீது நான் கொண்ட காதல் மட்டும் என்றும் தீரா!


<< Home