சில்லுனு ஒரு காதல்!
நான் இப்போது காதலில் சிக்கி இருக்கிறேன்....
ஆம் சில்லுனு ஒரு காதலில்!
காதலில் விழுவது ஒன்றும் புதிதல்ல எனக்கு...
இசை புயலின் ஒவ்வொரு படைப்பு வெளிவரும் போதும்
அவர் படைப்பிலும், அவர் மீதுமே காதல் கொள்வது வாடிக்கை தான்!
முதன் முதல் காதல் வயப்பட்டது என் பதினோராவது வயதில்.
அப்போது தானே ரோஜா வெளியானது!
அன்று அவரிடம் மயங்கிய நான் பல முறை தெளிந்து
பின் மீண்டும் மீண்டும் அவரிடமே மயங்கி போனேன்.
நாம் இதுவரை சந்தித்திராத ஒருவர்
நம்மை இப்படி வசியம் செய்து வைப்பது கூடுமோ!
அவரை ஒரு முறை சந்தித்தும்விட்டால் பின் என்னவாகும்?
சந்தித்தேன் அவரை, பெங்களூரில்,
அவர் நடத்திய இசை முழக்கத்தில்.
கிருஷ்ணருக்கு மீராவை போல் இங்கு பல ஆயிரம் மீராக்கள்.
அன்று இந்த மீராவிற்கு யோகம் தான்.
கிருஷ்ணரை பார்த்து கை கொடுக்க முடிந்ததே!
சில பல வார்த்தைகளும் பேச முடிந்ததே!
மறுபிறவி என்று ஒன்று இருந்தால்
அதில் நான் மீண்டும் பிறந்தால்
இசை புயலை போல் பிறக்க வேண்டும்
அல்லது மீண்டும் அவரின் ரசிகனாகவே பிறக்க வேண்டும்.
இதோ இப்படி இரவு பதினொன்றுக்கு,
அலுவலகத்தில் யாரும் இல்லா இந்நேரத்தில்,
அவரின் புதிய இசையில் மூழ்கி,
இப்படி தனியாக உளறிக்கொண்டிருந்தால்,
என்னவாம்?
நான் மீண்டும் காதலில் சிக்கி இருக்கிறேன்....
இச்சமயம் சில்லுனு ஒரு காதலில்!

PS: இதை படித்து என் தோழி எழுதியது...
நீ காதலில் சிக்கி கொண்டாயோ!
கேட்டவுடன் அட இது தீராத வலி ஆயிட்றே..
இவனுக்கு எதற்கு இந்த போராதகாலம்
என்று யோசிக்கையில் கூறிவிட்டாய்
என் காதல் ஒரு பெண்ணிடம் அல்ல..
ஒருவரின் இசையின் மேல் என்று...
அப்பாடி! கொள்ளை மகிழ்ச்சி!
நீ நலம் காண என் வாழ்த்துக்கள்!

<< Home