Sunday, July 30, 2006

அன்று நான் எடுத்த முடிவு

அழகான குடும்பம் !

இரவும் பகலும் வேலை செய்து
என்னை ஒரு இளவரசன் போல்
வளர்க்கும் என் தந்தை!

இப்படியும் இருப்பார்களா என்று
எண்ணத் தோன்றும் அளவு தியாகங்களை செய்து
என்னை கவனிக்கும் என் தாய்!

இருந்தும் இவர்களுக்கு ஏன் புரியவில்லை...நான் இசையின் மீது கொண்ட காதல்!

ஆரம்பத்தில் என்னை முழுமையாக ஆதரித்து வ‌ந்தவர்கள்
பின் எனோ அதை பின்னுக்கு தள்ளினர்.
பொது தேர்வு காலங்களில் அதை அறவே நிறுத்தினர்.

இசையே என் மூச்சு என்று நான் இருக்க
படிப்பு தான் முக்கியம் என்று ஏன் என்னை வதைக்கிறார்கள்?

நான் பதினைந்து வயதில் யோசித்தது!

நான் இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு கணிப்பொறியாளராக.
பெற்றோரின் ச‌ந்தோஷம்..வாழ்க்கையில் ஒரு நிதானம்.

இப்போது இசையில் மீண்டும் என் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
நான் நினைத்த உயரத்தை எட்ட முடியுமா தெரியவில்லை..
ஆனால் இனி நிச்சயம் இசை என் வாழ்வில் ஒரு அங்கம் தான்!

எட்ட முடியாத அந்த கூடுதல் உயரத்தை விட
தினமும் எட்டி பார்க்கும் என் பெற்றோரின் ச‌ந்தோஷம்
எனக்கு மன நிறைவே!

அன்று நான் எடுத்த முடிவு சரி தான்!