எங்கும் இப்படித்தானோ!!

மேகங்கள் இடையே உலாவும் பொது அவளை பார்த்தேன் அன்று !
நிலவுக்கு பொட்டிட்டு அலங்காரம் செய்தார்களோ என்று தோன்றியது.
ஒரு சிறு குழந்தை போல் அங்கும் இங்கும் ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்.
நான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றேன்.
இரட்டை பின்னலில் துள்ளி ஆடிக் கொண்டிருந்தவள்,
என்னை பார்த்து சட்டென்று திரும்பி விட்டாள்.
பின் மெல்ல வெட்கப்பட்டு கொண்டே என்னிடம் நெருங்கினாள்.
அவ்வளவு நேரம் இளையராஜா-வின் இன்னிசையாக இருந்த என் மனம்,
இசை புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க துவங்கியது.
நெருங்கி வந்தவள் என் தோளில் சாய முனையும் பொது,
தடாலென்று கீழே சரிய தொடங்கினாள்.
நான் அவளை பிடிக்க எத்தனிக்கும் முன்னரே அவள் பாதி உயரம் குறைந்திருந்தாள்.
அவள் பின் தானாக நானும் சரிய துவங்கினேன்.
தரையை தொடும் முன் எப்படியும் பிடித்து விடலாம் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே.
படு பாவி ! சரிந்த அவளை லாவகமாக பிடித்து நேராக தன் பையில் திணித்துக் கொண்டான்!
நானும் என் பையில் தஞ்சம் அடைந்தேன்.
இரு நண்பர்களும் பேசிய படி தங்கள் வீட்டை நோக்கி நடந்தனர்!
பெரு மூச்சு விட்ட படி அவர்கள் அடுத்து பட்டம் விடும் நேரத்தை,
என் தேவதையை நான் சந்திக்கும் அந்தப் பொழுதை எண்ணி கனவு காண ஆரம்பித்தேன்.
"இந்த முறை எப்படியும் அவளிடம் பேசிட வேண்டும்"


<< Home