Tuesday, May 06, 2008


















வருடங்கள் சில பல‌
கடந்திருக்கும்

எதிர்பாராமல் நிகழ்ந்த
ஒரு சந்திப்பு அது

முதல் அறிமுகம்
நினைவில் இன்னும் பத்திரமாக!

கல்லூரி நாட்களில்
தோழியிடம் வாங்கிய‌
கருத்தம்மா இசை தட்டில் ஆரம்பித்த‌
இனிய உறவு
இனிய ஆச்சர்யம்
ஆச்ச‌ர்ய‌ உற‌வு!

எதிர்பார்ப்புக‌ள் அதிக‌ம்
இல்லாம‌லே ப‌ழ‌கினேன்

பின்
நாட்கள் பல லயித்திருந்தேன்
அவளின் இன்னிசையில்

நாட்கள் நகர‌
தெளிந்தேன் மெல்ல‌

புது உறவுகள்
அதில்
மெல்ல‌
மறந்தே விட்டேன் அவளை

என்றாவது நினைவில் தோன்றினாலும்
நினைவுகளில் மட்டுமே சந்தித்திருந்தேன் அவளை

2003ம் ஆண்டு
ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
முதன் முறையாக சென்னையில்

எதிர்ப்பாராமல்
மீண்டும் ஒரு சந்திப்பு
அவளுடன்

அதிரடி இசையின் ஆக்கிரமிப்பில்
அதிகம் பழகவில்லை இம்முறை

புன்னகையை மட்டும்
தவழவிட்ட படி
தாண்டி விட்டேன்

மீண்டும் மறந்து விட்டேன் அவளை

எப்போதாவது தோன்றும் நினைவு மட்டுமே
சந்திக்கும் ஆவல் அப்போதும் ஆட்கொள்ளவில்லை

இயன்றால் சந்திக்கலாம் என்றபடி
இயல்பாக இருந்துவிட்டேன்
இந்நாள் வரை

மே 1

சந்தித்தேன்
இன்று
இவ்விடத்தில் அவ‌ளை


தொலைத்த‌ உற‌வினை
தேடி நான் துவ‌ங்க‌

சீக்கிரமே தெரிந்து கொண்டேன்
எவ்வித‌ மாற்ற‌மும்
இல்லை அவளிடம் என்று

அன்று ஒரு நாள்
என்னிட‌ம் ஏற்ப்ப‌ட்ட‌ தாக்க‌ம்

இன்றும்
ஒரு அணு அள‌வும் குறையாம‌ல்

உற‌வை புதுப்பிக்கும் முய‌ற்சியில்
ஆஹா
மீண்டும்
சொக்கியே போனேன்!

தலைவா!

அந்திமந்தாரை-க்கு நன்றி