Wednesday, March 19, 2008














கண்கள் சுருக்கி
தேடினேன் என் கைப்பேசியை

தலையும் என் வலக்கையும் மட்டுமே
பெட் ஷீட்டின் வெளியே

பத்து மணிக்கு கான்ஃப் கால்
ஒரு எட்டரை இருக்குமா இப்பொழுது?

வெளிச்சம் வழிந்து கொண்டிருந்தது
ஜன்னலின் வழியே

நீட்டிய கையில்
தட்டுப்பட்டது.
எடுத்துப் பார்த்தேன்

அட‌

"5 Message Received"

அதிகாலையில் ஐந்தா?

ICICI ஆ?
Airtel ஆ?

அவ்வளவாக
ஆர்வம் இல்லாமலே பார்த்தேன்

அட‌!

முதல் எஸ்எம்எஸ் அவளிடமிருந்து
வாசித்தேன் ஆர்வமாக‌

நடு இரவில் தூக்கம் வரவில்லையாம்
:-)
சிரித்தப்படி தொடர்ந்தேன்

இரண்டாவது எஸ்எம்எஸ்-உம் அவளிடமிருந்தே

அலுவலக வேலை பிடிக்கவில்லையாம்
:)
அது சரி

அவளே மீண்டும்

நேற்று நாங்கள் ஒன்றாக‌
அதிக நேரம் செலவிட முடியவில்லையாம்
:)

நான்காவது

அம்மா ஊருக்கு போயிருக்கிறார்களாம்
அதனால் அவள் கவலை இல்லாமல் எஸ்எம்எஸ் செய்கிறாளாம்
;)

குறும்புடன் அவள் சொல்வது போலவே இருந்தது

ஆச்சர்யம் ஏதும் இல்லை
ஐந்தாவதும் அவளே

"What doing? Sleeping? Dreaming? About me? Better say yes :-)"

கைபேசியை மடித்து வைத்தேன்
சோம்பலுடன் கூடிய புன் சிரிப்பு
என் முகத்தில்!

மெல்ல புரண்ட படி எஃப்எம்-ஐ
உயிர்பித்தேன்

"ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தை தொடுகிற உணர்வு"

கார்த்திக்கின் குரல் உருகி கொண்டிருந்தது!