Tuesday, February 19, 2008

நிஜம்!

இரவு பதினொன்று
என் அறையில் தனியாக
நான்

எதை பற்றியும் சிந்திக்காம‌ல்
ஏதோ ஒரு ஆழ்ந்த நிலையில்

ஒரு முறை கிள்ளிப் பார்த்தேன்
அட‌!
கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது

நான் பொழுதும் காணும்
கனா அல்லவே இது!

நடந்தவையெல்லாம் உண்மை தானோ!

மீண்டும் ஒரு முறை
மூழ்கியே போனேன்
நன் நினைவுகளை நினைத்தப் படி
உன் நினைவுகளில் நனைந்த‌ப் படி

மாலை ஆறு
என் வீட்டின் முகப்பில் நாம்

"ஹேய்... கொஞ்ச நேரத்துல கிளம்பிடனும்... ஓகேவா?"

முப்ப‌து நிமிட‌ங்க‌ள் என்
முடிவெடுத்தோம்!

மும்மு‌ர‌மாக‌
என் சிறுவயது புகைப்படங்களை
ஆராயத் துவங்கினோம்!

தனிமையில் நாம்
அருகில்
ஒட்டிய படி நீ

எல்லைக் கோடுகள் எதுவும்
மெல்ல
இல்லை என்றே ஆனது

சின்ன‌ சின்ன‌ வருடல்கள்
புது புது சிலிர்ப்புகள்

ஸ்பரிசங்கள் எல்லாம்
புது புது
ச‌ங்கீதங்கள்

அதிகம் பேசிக்கொள்ளவில்லை
ந‌ம் உத‌டுக‌ள்

இன்று
அதிகம் பேசவும் விரும்பவில்லை
நம் உதடுகள்

"சோ க்யூட்"
என்றாய்
என் பள்ளி பருவத்தைப் பார்த்து

"இவ்ளோ சமத்தா நீ அப்போலாம்"
என்ற படி
புகைபடத்தில் என் கன்னத்தை கிள்ளி
ஒரு முத்தம் வைத்தாய்.

இப்போதும் நான் சமத்து பையன் தானே!

எண்ணியபடி கேட்டேன்

நிஜம் அருகில் இருக்க
நிழலுக்கேன் இத்தனை அலங்காரம்?

சட்டென திரும்பினாய் தெளிவின்றி.

"என்ன... என்ன கேட்ட?"

பதில்கள் தேவையில்லாத கேள்விகள் சில‌!

சிரித்தபடியே உன்னைப் பார்த்திருந்தேன்.

வெட்கத்தில் நீ சிரிக்கும் அந்த சிரிப்பிருக்கிறதே!

ஆஹா!

அதிலிருந்து இன்னும் நான் மீளவே இல்லை!

இரண்டு நொடி மெளனம்
பின்
இரண்டு வருடத் தவிப்பின் அமைதி

மெல்ல மெல்ல‌
என் இரு கைகளால்
உன் முகம் உயர்த்தி

கண்ணோடு கண் பார்த்தபடி
நம் இரு உதடுகளின்
பிரிவு குறைக்கலானேன்

கண்கள் மெல்ல நீ மூட உன்
உதடுகளை எனது தேட‌...


















முப்பது நிமிடங்கள்
என
அதற்கு பின்
மூன்று முறை எடுத்த முடிவு

எல்லாம் எல்லாம்...

மீண்டும்
ஒரு முறை கிள்ளிப் பார்த்தேன்

அட‌!
இனி எதுவும் கனவல்லவே!

நீ நிஜம்
நான் நிஜம்
நம் காதல் நிச்சயம் நிஜம்!