வண்ணங்கள் !

இருபது நிமிடம்
இரவில் பயணம்
இரண்டு சக்கர வாகனம்
இருவர் இதில் நாமே
தலைவலி என நீ என்
தோள் மீது சாய்ந்திருக்க உன்
தலை கோதியபடி நான்
தவம் கொண்டது போல் சாலை கடக்க
வார்த்தைகள் ஏதும்
வீணடிக்க படவில்லை
வழக்கங்கள் ஏதும் இன்று
வரம்பு மீறவும் இல்லை
மெளன உலகில்
ஊர்வலம் சென்றோம்
இருந்தும்
மட்டற்ற மகிழ்ச்சி
உள் மனதில் கொண்டோம்
தனிமையில் ரசிக்கும் அந்த
மொட்டை மாடி நிலவு
இனிமையில் நனைக்கும்
அந்த கடற்கரையில் கால்கள்
முழுமையின்றியே முடியும்
முக்கால்வாசி நடு இரவு மொக்கை
ஆஹா.. அப்புறம் இது !
என் வாழ்க்கையின் குறிப்பில்
புது புது வண்ணங்கள்
ஒவ்வொரு வண்ணத்திற்கும்
ஒவ்வொரு நன்றி தோழி !


<< Home