Tuesday, June 19, 2007

பட்டாம்பூச்சி!














பல முறை பிடிக்க முயன்றும்
என் கைகளில் சிக்காத‌
பட்டாம்பூச்சி நீ

சோர்ந்து போய்
நீட்டிய கைகள் மடக்காது
கண் அயர்ந்திருந்தேன் ப‌ல‌ நாள்.

மீண்டும் நான் கண் திற‌ந்த போது
நீட்டிய என் கை விரலில்
ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாய்
நீ!

பிடிக்க முனைவேனோ
பார்த்து ரசிப்பேனோ

என்ன செய்வேன் என்று நினைத்தாய்!