உறவு!

இந்த உறவுக்கு
பெயர் தான் என்ன?
ஈர்ப்பு
பரிச்சயம்
நட்பு
காதல்
இதில் எதுவுமே முழுமையாக இல்லை
இதில் எதுவுமே இல்லாமலும் இல்லை
சில நேரங்களில்
ஈர்ப்பு மனதை இம்சிக்கும்
சில நேரங்களில்
காதல் பொங்கி வழிந்து
கண்களைக் கட்டிக்கொள்ளும்
சில நேரங்களில்
துவண்டு போன இதயத்திற்கு
தோழமை தோள் கொடுக்கும்
சில நேரங்களில்
இதற்கு பெயர் தான் என்ன
இப்படி யோசிக்க வைக்கும்
இந்த உறவில் இது எதுவும்
இல்லாமலும் இருக்க இயலாது
அளவிற்கு அதிகமாக இருக்கவும் இருக்காது
வண்ணங்கள் ஒவ்வொன்றும்
அழகு தான் தனித்தனியாக
கொள்ளை அழகு அது
ஒன்றாக ஒரு வானவில்லாக
அப்படி ஒரு அற்புதம் தான்
இந்த உறவும்
ஆம்
இதுவும் ஒரு வானவில் உறவு
உறவின் பல பரிமாணங்களின் சங்கமம் !


<< Home