Monday, June 04, 2007

ரங்கோலி!

தலை குளித்து
வெளியே வந்தாய்
கூந்தலில் இன்னும்
ஒட்டிய ஈரத்துடன்

அங்கங்கே சொட்டிய
துளிகளில் வைத்தாய்

ஒரு அழகிய கோலத்திற்கான புள்ளிகள்

கோலத்தையும் வரைவாய்
என காத்திருக்க‌

தலை துவட்ட‌
நீ வந்தங்கு
நடுவே அமர்ந்தாய்

அழகிய ரங்கோலியாய்!