Monday, June 04, 2007

Empathy!

"Empathy"

மீட்டிங் முழுவதும் பல முறை அவர் உச்சரித்த வார்த்தை அது.

"உனக்கு Empathy ரொம்ப அதிகம். அது உன்னை ஒரு நல்ல மேனேஜர் ஆவதிலிருந்து தடுக்கும். ஒவ்வொரு எஞ்சினியரின் கஷ்டங்களையும் நீ யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் அவர்களிடம் வேலை வாங்குவது இயலாத ஒன்றாகிடும். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை ப‌ற்றி அக்க‌றை கொள்ளாதே என்று சொல்ல‌வில்லை. அள‌வாக‌ அக்க‌றை கொள். அள‌வாக‌ Empathy-யும் கொள். அப்போது தான் அதிக‌மாக‌ வேலை வாங்க‌ முடியும்"

பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து பேசியதில் தளர்ந்து போய்விடுவார் என எதிர்பார்தேன். ம்ம்ம் எங்கே! மனுஷன் இன்னும் ஒரு முப்பது நிமிடங்கள் வேறு ஏதாவது பற்றி பேசிய பின் தான் மீடிங்கை முடிப்பார் என்று புரிந்துவிட்டது.

பல விஷயங்கள் பேசினார். ஆனாலும் எனக்கென்னவோ அவர் Empathy பற்றி சொன்னது தான் மனதிலேயே இருந்து கொண்டிருந்தது. நாம் அவர் சொல்வது போல் ரொம்ப மற்றவர்கள் பார்வையில் யோசித்து விட்டு விடுகிறோமா என்று எண்ண துவங்கினேன். நிமிடங்கள் கரைந்தோடுவதே தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்.

என்னை இப்படி எல்லாம் என்னை யோசிக்க வைத்துவிட்டாரே என்று அவர் மீது ஒரு எரிச்சல் கூட புதிதாக முளைத்தது.

ம்ம்ம்...ஒரு வழியாக அவர் களைத்து விட்டார். மீட்டிங்கும் முடிந்தது.

அறையை விட்டு வேளியே வரும் போது இது தான் என் மனதினில்.

ஆனால் அவரும் தான் என்ன செய்வார். என்னை வேலை வாங்க சொல்வது தானே அவர் வேலை! அவர் அப்படி தானே சொல்ல வேண்டும் என்றபடி என் க்யூபை நோக்கி நடந்தேன்.

*Empathy - A feeling of concern and understanding for another's situation or feelings.