திருமண பரிசு!

உன் திருமணம்
என்னிடம் என்ன வேண்டும்?
கேட்டேன் சலனம் ஏதும் இன்றி.
பலத்த மெளனம்
பின் மெல்ல தொடர்ந்தாய்.
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
எத்தனை புது உறவுகள் நீ கொண்டாலும்
என் நினைவலைகள் மட்டும்
உன் இதயத்தை கடந்துவிடாமல்
பார்த்துக் கொள்!
உனக்கென ஒரு பெண் வந்த பிறகும்
உனக்கென ஒரு பெண் முன்பு இருந்ததை
எப்போதாவது நினைத்துக் கொள்
ஒரு மூலையிலாவது
என் நினைவுகளை நிறுத்திக்கொள்!
என்னை நினைத்து
நீ எழுதியவற்றை
நம் வசந்த காலங்கள் பற்றி
நீ கொண்ட கனவுகளை
ஒரு போதும் அழித்து விடாதே!
நாம் சேராததில்
என் மனதினில் வெறுமை தான்!
ஆனாலும்
எப்போதாவது என்னை நீ நினைப்பாய்
நம்மை பற்றி சிந்திப்பாய்
என்ற அந்த சிறு சந்தோஷம்
நிறைத்து விடும் அந்த வெறுமையை!
தருவாயா இதை எனக்கு?


<< Home