நடு இரவு!

தூக்கம் வரவில்லை.
என்ன செய்யட்டும் சொல்.
ஃப் எம் இல் பாடல்கள் கேட்டபடி
உறக்கத்துடன் போரிடட்டுமா?
மொபைல் ஐஸ் க்ரீம் கடையை தேடிப்பிடித்து
ரோட்டில் நின்றபடியே
ஐஸ்க்ரீம் சாப்பிடட்டுமா?
சற்றே தோய்வு ஏற்பட்ட சமயம்
மூடி வைத்த நாவலை
மீண்டும் தொடரட்டுமா?
மொட்டை மாடி சென்று
மேகத்தினிடையே ஒளிந்து
நட்சத்திரங்கள் விளையாடும்
கண்ணாமூச்சியை ரசிக்கட்டுமா?
கிதார் வாசிக்கிறேன் என்று
அடுத்த அறையில் இருக்கும் நண்பனை
ஆழ் கோபம் கொள்ள செய்யட்டுமா?
அல்லது
இன்று நம் இருவருக்கும் இடையே
இடம் பிடித்த சுவாரஸ்யங்களை
பதிவுகளாக சிறை பிடிக்கட்டுமா?


<< Home