வெல்!

ஆழமாக சுவாசம்
இழுத்துப் பிடித்தாய்
ஆழ்கடலின் அடிவாரம்
ஆர்வமாக குதித்தாய்
கண்களில் தெளிவும்
மனதில் அமைதியும்
அபரித அளவில்
கொண்டிருந்தாய்
தடைகள் ஒவ்வொன்றையும்
திறமையாக தாண்டினாய்
சிப்பிகள் சேகரித்தாய்
கடலின் அடியில் எம்பி
மீண்டும் விண் எட்டிப் பார்த்தாய்
கரை சேர்ந்தாய்
சிப்பிகள் திறக்க எத்தனித்தாய்
தேடிய முத்துக்கள் கிடைக்குமா?
கிடைத்த முத்துக்கள் பிடிக்குமா?
கவலை சிறிதும் வேண்டாம் தோழி!
கிடைத்தால்
பிடித்தால்
மகிழ்ச்சி
இல்லையென்றாலும் மகிழ்ச்சி
இத்தனை சிப்பிகள் சேகரித்தாய் நீ
பிடித்த ஒன்றிற்காக
இன்னொரு முறை சுவாசம் பிடித்தால் தான் என்ன?
பயப்பட ஒன்றும் இல்லை
பயன் படவே எல்லை ஏதும் இல்லை
நிறைவுடன் செல்
நினைத்ததை சொல்
விரைவிலே வெல்!


<< Home