Tuesday, November 27, 2007

வேலை வேண்டும்!













அதிக வேலையாம்!

இமை கொட்டாமல்
பார்த்திருந்தாய்
உன் கணினி மானிட்டரை!

ஹாய்!
ஹலோ!
ஹே!

எதையும் பொருட்படுத்தாத
கவனம் உன்னிடம்

ச்சே!

பொறுமை இல்லை என்னிடம்!

சரி
எனக்கும் ஏதாவது
வேலை கொடு!

உன்னை பற்றி
கவிதைகள் எழுதி
உன்னை படுத்தட்டுமா?

இல்லை
உன்னைப் போல் நானும்
வேலையில் மூழ்கட்டுமா?

உன் அருகே
எனக்கோர்
இடம் கொடு

இமை கொட்டாமல்
நானும் பார்த்து இருந்துவிடுகிறேன்
என் கனவு மானிடரை!