Tuesday, May 22, 2007

சோர்விலும் சிரிப்புடன்!

தலைவலியுடன் வெளியே வந்தேன்
அப்ரெய்சல் மீட்டிங்கிலிருந்து

மனிதனுக்கும் இயந்திரத்துக்கும்
இம்மியளவு கூட வித்தியாசம் தெரியாதவர்களுடன்
பேசினால் வேறு என்ன தான் கொள்வது

'அதிகமாக ஆசைபடும்
ஆன்சைட் மேனேஜர்களும்
அதிகமாக வேலை வாங்கும்
உள்ளூர் மேனேஜர்களும்
நல்லா வாழ்ந்ததாக‌
சரித்திரமே இல்லை'

சபித்தபடி நடந்தேன்.
உன் க்யூபை நோக்கி.

வெறுமை உன் க்யூபில்
திடீர் சோர்வு என்னுள்

மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்த பேச்சு
நீ இல்லை என்ற என் தவிப்பு

எது அதிக சோர்வு தந்தது
தெரியவில்லை எனக்கு

ஊமை ஆக்கியிருந்த என் செல்லை இயக்கினேன்
"ஹே...ரொம்ப லேட் ஆகிடுச்சு..
வீட்டுக்கு கிளம்புறேன்
முடிஞ்சா நைட் கால் பண்றேன்"

நீ தான்.

சொர்ந்து போனேன்.

சில பல நிமிடங்களுக்கு பிறகு எழுதினேன்.
"மீட்டிங் ஓவர்...நானும் ஓவர் :("

அடுத்து என்ன செய்வது?
டின்னர் சாப்பிட்டு வீடு திரும்பலாமா?

சாப்பிடவும் பிடிக்க வில்லை
வீடு திரும்பவும் பிடிக்க வில்லை

என் க்யூப் சென்று
கண்களை மூடிக் சரிந்தேன்.

அவளின் விருப்ப பாடல் ஒலித்தது
என் அருகில்
என் செல்லில்.
அவள் தான்.

இந்த சோர்விலும் அவள் என்னிடம்
ஒரு சிறு சிரிப்பினை
கொண்டு வந்தாள்.

"ஹே...ஹலோ"

"ஹே...என்னடா என்ன ஆச்சு...ரொம்ப ஆஃப் ஆகிட்டியா"

போனை செல்லமாக மடியில் எடுத்து
வசதியாக பேச துவங்கினேன்.

பாரம் கொஞ்சம் கொஞ்சமாக
கரைய துவங்கியது.

மூன்றாவது ஆள் பார்வையில்
நடந்ததை எண்ணி சிரிக்கவும் முடிந்தது.

ஆயிரத்து எண்ணூறு நிமிடங்கள் கடந்தன.

என் சோர்வே சோர்ந்து போயிருந்தது.
உற்சாகம் தான் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.

எதுவாக இருக்கும்?

என் கவலையை மனம் விட்டு
பகிர்ந்து கொண்டதா?

உன்னிடம் மனம் விட்டு பேசியதா?

தெரியவில்லை எனக்கு

நன்றாக பசித்தது
சாப்பிட்டு வீடு திரும்பினேன்.

ஏனோ இந்நாளில் தான்
கடைசி சில மணி நேரங்களில்
எத்தனை மாற்றங்கள்

என் டைரியை எடுத்து எழுத துவங்கினேன்.

"தலைவலியுடன் வெளியே வந்தேன்
அப்ரெய்சல் மீட்டிங்கிலிருந்து..."